விமான ஓடு பாதைகளுக்கருகில் பட்டம் விட வேண்டாம்!

0
12

பட்டங்கள் பறக்க விடப்படும் போது ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது, தற்போது பட்டங்கள் பறக்க விடப்படும் பருவ காலமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமானப்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

விமான ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறக்கவிடப்படுவது மிகவும் ஆபத்தான விடயமாகும்.  விமான ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவது உலகெங்கிலும் உள்ள விமான விபத்துகளுக்கு ஒரு பிரதான காரணமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது விமானம் பறப்பதற்கு நேரடி தடையாக இருக்கும்.

நாட்டில், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீன விரிகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளிலும் பட்டம் பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது அத்தியாவசியமானதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here