விராட் கோலி உணவகத்தில் தமிழருக்கு மறுக்கப்பட்ட அனுமதி!

0
209

மதுரையை சேர்ந்த ராவண ராம் என்ற பாடகர் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பதிவு செய்து பிரபலமானவர். இவர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ஒன் 8 என்ற உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.

அந்த உணவகத்தில் வேட்டி சட்டை போட்டு செல்ல அனுமதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகம் முன் நின்று தனக்கு நடந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

இதற்கு பலரும் கண்டனம் மற்றும் அதிருப்தியை தெரிவித்து வருவதோடு, இது குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here