விளம்பர படத்தில் அஜித்!

0
17

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியை தொடங்கினார். துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். மேலும் பல போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்தாலும், விளம்பரங்கள் மற்றும் ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார் அஜித்குமார். ஆனால் சமீபத்தில் தனது கார் பந்தய அணிக்கான ஸ்பான்சர்ஷிப் காரணமாக பிரபல குளிர்பான விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி அதிக அளவில் பகிரப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய விளம்பரத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். இந்த விளம்பரத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here