விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய நடிகை- வைரலான புகைப்படம்

0
204

சீரியல் நடிகை ஒருவர் தனது விவாகரத்தை கொண்டாடும் விதமாக போட்டோஷுட் நடத்தியுள்ளது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினி ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்தனர். இந்நிலையில் ஷாலினி, ரியாஸ் இருவரும் தற்போது விவாகரத்து செய்துள்ளனர்.

இதனை கொண்டாடும் விதமாக ஷாலினி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களே தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக அவர் தனது சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், குரலற்றவராக தங்களை உணரும் நபர்களுக்கு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது தவறில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். எப்போதும் உங்களை குறைவாக எண்ணவே வேண்டாம். உங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் தேவையான விஷயங்களை செய்ய தயாராகுங்கள்.

விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல

விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க ஒரு திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியே வருவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்

ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் ரியாஷுடன் இருக்கும் போட்டோவை கிழிப்பதை போல் அவர் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here