விஷ காளான்மூலம் மூவரை கொன்றவருக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை!

0
14

நச்சுக் காளானை சமைத்துக்கொடுத்து மூவரை கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 30 வருடங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே 50 வயதான எரின் பாட்டர்சன், பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.அதாவது 2056 ஆம் ஆண்டாகும்போது அவர் உயிருடன் இருந்தால் பிணையில் வெளியேறுவதற்கரிய வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே இவர் இரு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டதால் 78 வயதளவில் பிணைகோர முடியும்.விக்டோரியாவில் 2023 ஜுலை 29 ஆம் திகதியே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது முன்னாள் கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோருக்கே  இவர், டெத் கெப் எனப்படும் நச்சுக்காளானை , மாட்டிறைச்சியுடன் சமைத்துக் கொடுத்துள்ளார். இதனால்     கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தனர்.

இதனையடுத்து எரின் பாட்டர்சன்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.  ஜூரி குழு  , எரின் பாட்டர்சன குற்றவாளி என ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையிலேயே நீதிமன்ற தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here