எமது நாட்டில் இன்று ஏராளமானவர்கள் வீட்டு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள் இவர்கள் சேவை காலத்தின் போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.எனவே அரசாங்கம் என்ற வகையில் இவர்களுக்குரிய அடிப்படை சி 189 தொழிலாளர் ஒப்புதல்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களில் அடிப்படை உரிமைகளையாது அவர்களின் தொழில் பாதுகாப்பு கருதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என ப்ரோட்டெக் தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் கல்ப ம|துரங்க கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று மாலை (09) ஹட்டனில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
இன்று பெருந்தோட்டங்களில் போதியளவு வருமானம் இன்மை காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் வீட்டு பணியாளர்களாக பணி புரிந்து வருகின்றனர் இவர்களுக்கு என்று எவ்வித அடிப்படை சலுகைகள் கூட பெற்றுக்கொடுப்பதில்லை, இவர்களுக்கு ஓய்வுPதியம் கிடையாது,சேமலாப நிதியம் கிடையாது வரவு செலவு திட்டங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் சலுகைகள் எதுவும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. பலர் வீடுகளில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அண்மையில் கூட சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பணிபெண்ணாக பணி புரிந்து சிறுமி ஒருவர் மிகவும துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஹட்டன் பகுதியில் கூட ஒருவர் நாள் ஒன்றுக்கு தனது வயிற்றுப்பிழைப்புக்காக 50 ரூபாவுக்கு பணிபுரிகிறார்கள் இது இவர்கள் அன்றைய நாள் சாப்பாட்டுக்காகத்தான் வேலை செய்து வருகிறார்கள்,இவர்கள் வழங்கும் 50 ரூபா சம்பளம் பஸ்ஸூக்கு கூட போதாது ஒரு சிலருக்கு நாள் ஒன்று 300 ரூபா மாத்திரமே சம்பளமாக பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. ஒருவர் 20 25 வருடங்கள் ஒரு சில வீடுகளில் பணி புரிகின்றனர் அவர்கள் வேலை செய்ய முடியாது போனதும் எவ்வித கொடுப்பனவுமின்றி அவர்கள் தொழிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
இறுதி காலத்தில் அவர்கள் வாழ்வதற்கான எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையே உருவாகிறது. ஆகவே தான் நாங்கள் தெரிவிக்கிறோம், அவர்கள் தொழிலினை பெற்றுக்கொடுத்த வீட்டு எஜமான் அவர்களுக்கு வாழ்வதற்கான ஏதாவது ஒரு வழியினை அரசாஙகம் தலையிட்டு செய்து கொடுக்க வேண்டும்.அதே போன்று கொவிட் காலப்பகுதியில் இவர்களுக்கு வாழ்வதற்கான எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. நிவாரணங்களும் இவர்களுக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை. நாளை நாள் எவ்வாறு கழிப்பது இவர்களின் பிள்ளைகளை எவ்வாறு காப்பாற்றுவது பிள்ளைகளை எவ்வாறு படிக்க வைப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள.
இந்நிலையில் இவர்கள் வாழ்வது எவ்வாறு ஆகவே நாங்கள் தொழில் அமைச்சரிடம் இவ்வாறு வீட்டு பணியாளர்களாக ஈடுபடுபவர்களுக்கு ஓய்வூதியம்,சேமலா நிதியம்,குறைந்த பட்ச சம்பளம்,சம்பள நிர்ணைய சபையினூடாக சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும். பெருந்தோட்டஙகளில் இவர்களுக்கு பொருளாதார ரீதியில் இவர்களை வலிமைப்படுத்த அரசியல் தலைவர்கள் என்ற வகையில் சிந்தித்து செயப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் அதனை தொழில் அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார.
ஆகவே அதனை உடனே நடைமுறை படுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் இறுதியாக தெரிவிப்பது கொவிட் காரணமாக பாதிகப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் தோட்டங்களில் பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே போன்று நீதிமன்றங்களில் தலையீட்டால் இசாலினிக்கு நிதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கருப்பையா மைதிலி தமிழ் மொழியில் உரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கு ப்ரொட்டெக் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள்,அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்.