திருடும்போதே கையும் களவுமாக திருடன் ஒருவன் தலவாக்கலை போலீசாரிடம் மாட்டிக் கொண்ட சம்பவமொன்று தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இன்று அதிகாலை 4 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
குறித்த இளைஞன் தலவாக்கலை நகரசபை கட்டிட தொகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் திருடி கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன்
உடப்புசலாவ பகுதியை சேர்ந்தவரென்றும் மேலும் சில கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுஜீவன்