வீதியிலிருந்து புரண்டு விழுந்தது லொறி!

0
110
பதுளை, கஹடருப்ப வீதி வீ முத்துமால பகுதியில் (24) இன்று லொறி ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழியளிக்க முற்பட்டபோது வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

பதுளை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற மழையுடன் கூடிய காலநிலையால் பெரும்பாலான வீதிகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளமை போன்று குறித்த வீதியில் வழமையான போக்குவரத்து பாதையின் அகலம் குறுகியுள்ளமையே இவ்விபத்துக்குரிய காரணமாகியுள்ளது.

இவ்விபத்தில் தெய்வாதினமாக லொறியின் சாரதி காயங்களின்றி தப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here