இந்தியாவில் கொவிட் இரண்டாவது அலை காரணமாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகரான நிதிஷ் வீரா உயிரிழந்துள்ளர்.
இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன், காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
45 வயதான நடிகர் நிதிஷ் வீரா கொவிட் தொற்றால் மரணமடைந்திருப்பது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.