வெப்பத்தால் அவதிப்படீர்களா… இதை செய்தால் போதும் உடனடிபலன்

0
220

கால மாற்றங்களினால் நம்மில் பலருக்கு உடல் உஷ்ணம் ஏற்படும், குறிப்பாக இந்த பிரச்சனை அதிக நேரம் வெயிலில் பணிபுரிபவர்களுக்கும், அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கும் இந்த உடல் உஷ்ணம் ஏற்படுகிறது.

இந்த உடல் உஷ்ணத்தினால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது.

மேலும் முடி உதிர்வு, வயிற்று வலி, முக பருக்கள் போன்ற எரிச்சலை மூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் சூடு குறைய சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இளநீரை தினமும் குடித்து வர உடல் சூடானது குறைய தொடங்கும்.

உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் ஆட்டுப்பாலை தினமும் குடித்து வர உடல் சூடு குறையும்.

உடலில் அதிகமான சூடு உள்ளவர்கள் ஆயுர்வேதா கடைகளில் விற்கக்கூடிய சந்தனாதி தைலத்தை வாரத்தில் 2 முறை தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். உடல் சூடு இருப்பவர்கள் தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் அதிகமான வெப்பம் உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சை பழம் சாப்பிட விரும்பாதவர்கள் ஜூஸ் போட்டும் குடிக்கலாம். வெப்பத்தன்மை குறையும்.

உடல் சூடு குறைய அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை சாறுவை குடித்து வந்தால் உடலில் இருக்கும் சூடு பிரச்சனை நீங்கும்.

உடல் சூடு உள்ள நபர்கள் தினமும் தாமரை பூ இதழ்களை நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். இருதயமும் தாமரை பூ இதழ்களை சாப்பிடுவதால் நன்கு வளர்ச்சி அடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here