வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் 11.06.2018 அன்று குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்களுள் 9 பெண் பிள்ளைகளும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)