போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, அவரது மனைவி உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு, பணமோசடி வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது புதன்கிழமை (15) தீர்ப்பளித்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை வழங்கினார்.