வெளிகள உத்தியோத்தரை தொழிலாளி ஒருவர் தாக்கியதால் வட்டகொடையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு

0
138

வட்டகொடை தோட்டத்தில் பணிபுரியும் வெளிகள உத்தியோத்தர் ஒருவரை குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவர் தாக்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் இன்று போராட்டம் ஒன்றை வட்டகொடை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுத்தனர்.

கைகளில் கறுப்பு பட்டி அணிந்தவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுப்பட்டனர்.

இதன்போது உத்தியோகத்தரை தாக்கிய தொழிலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டகாரர்கள் வலியுறுத்தினர்.

தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

க.கிஸாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here