வெளிநாடு செல்லும் தாய்மாருக்கு விதிக்கப்படவுள்ள தடை!

0
147

ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலின உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு இந்த பரிந்துரையை அளித்துள்ளது.

தாய்மாரின் கவனிப்பு இல்லாமல் 5 வயது வரை வளரும் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் மிகப்பெரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விடயம் குறித்த குழுவில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது குழந்தை ஒன்று சிறுவயதிலிருந்தே தாயை இழந்தால், எதிர்காலத்தில் மிகவும் வன்முறையான தலைமுறையாக உருவாக வாய்ப்புள்ளது.

அத்துடன் தாய் வெளிநாடு செல்வதால், சிறுவயதிலிருந்தே குழந்தைகள் பராமரிப்பின்றி இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கும் அதிகரிக்கும் என்பது குழுவின் விவாவத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here