நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

0
78

நேபாளத்தில்(nepal) இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்ரா நோக்கி புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது.நேற்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல மேல் எழும்பியபோது விபத்தில் சிக்கியது.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://x.com/dna/status/1816003168637243754?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1816003168637243754%7Ctwgr%5E5cc1feef8a612cdce003d1018ae719ae7595bfd0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fyarlosai.com%2Fnews%2F46166%2Fview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here