நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களையும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்புகள் நிதி அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க, சீன, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களையும், இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களையும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களின்போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.