வெளிநாட்டு பணியகத்தில் இருந்த வீடுக்கடன் பெறுவதில் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சிக்கலை தீர்க்க முயற்சி!

0
161

சொந்த வீட்டுக் கனவை நனவாக்க முடியாமல் நூற்றாண்டு காலம் காத்திருந்த பெருந்தோட்ட மக்கள் வெளிநாட்டில் உழைத்தாவது அந்த கனவை நனவாக்க முயற்சிக்கிறார்கள்.
வீட்டு கட்டுவதற்காகவே பலர் வெளிநாடு செல்கிறார்கள். வெளிநாட்டில் உழைப்பவர்களுக்கு உதவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வீட்டுக்கடன் திட்டத்தை அமுல்படுத்துகிறது.
வெளிநாட்டில் உழைத்த அனைவருக்கும் வீடமைப்பு கடனை பெற உரிமையுள்ளது. கிராம, நகர பகுதிகளில் வெளிநாட்டில் உழைத்தவர்கள் பணியகத்தால் வழங்க படும் கடனை பெற்று தாம் உழைத்த பணத்தையும் பயன்படுத்தி சொந்த வீடுகளை கட்டியுள்ளனர்.
வீடமைப்பு கடன் பெறுவதற்கு ஒருவருக்கு சொந்தக் காணி இருக்க வேண்டும். ஆனால் பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து வெளிநாட்டு சென்றவர்களுக்கு காணி உரிமையில்லாத காரணத்தால் வீடமைப்புக் கடனை பெற முடியவில்லை.
இதனால் வெளிநாட்டில் உழைத்த பலரின் சொந்த வீடு கட்டிக்கொள்ளும் நோக்கம் நிறைவேறவில்லை.
இவ்வாறு தமது வாழ்கைக்கு தேவையான முக்கியமான வீடுகட்டும் விடயத்திற்கு முதலீடு செய்ய முடியாததால் அவர்கள் உழைத்த பணம்; பயனற்ற பொருட்களில் முதலீடு செய்யப்பட்டு வீணாக்கப்படுகிறது.
மலையக பகுதியில் உள்ளவர்களுக்கு காணி உரிமை இல்லாததால் அவர்களுக்கு வீட்டுக்கடனை கொடுப்பதில் தமக்கு கொள்கை ரீதியாகவும் சட்டரீதியாகவும் சிக்கல் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
ஆனாலும் பெருந்தோட்டங்களிலிருந்து வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கும் விண்ணபதாரிக்கு குறிப்பிட்ட தோட்ட நிர்வாகம் “தமக்கு காணி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை“ என்று உறுதி அளிக்கும்   கடிதம் கொடுத்தால் தாம் கடன் வழங்க ;தயாராக இருப்பதாகவும், ஆனால் அனேகமான தோட்ட கம்பனிகள் இவ்வாறான கடிதத்தை கொடுக்க மறுப்பதால் தம்மால் கடன் வழங்க முடியாதிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரிடோ நிறுவனம் இந்த விடயத்தை அமைச்சர் திகாம்பரத்தின் பொறுப்பிலுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
இந்த பின்னனியில் இவ்வாறு “ ஆட்சேபனை இல்லை” என்ற கடித்தை பெறவதில் பிரச்சனைகளை எதிர்நோக்குபவர்களின் பெயர்களையும் தோட்டங்களையும் தமக்கு சமர்பித்தால் அவர்களுக்கான கடிதங்களை பெற்றுக்கொடுக்க அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சு பிரிடோ நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
இவ்வாறான கடிதங்கள் பெறப்பட்டால் வெளிநாட்டில் உழைத்து வீடுகட்டும் நோக்கத்தோடு இருப்பவர்கள் பணிகயத்தில் வீட்டுக்கடன் பெற்று வீடு கட்ட வாய்ப்பு ஏற்படும்.
இது சாத்தியமானால் பெருந்தோட்டங்களில் சொந்த முயற்சியில் வீடு கட்டுவோரின் தொகை அதிகரிக்கும்.
எனினும் இந்த விடயத்தை தனிநபர்களின் பிரச்சனையாக நோக்காமால் ஒரு கொள்கை ரீதியாக முன்னெடுக்க வேண்டும் என பிரிடோ அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
இந்த பின்னனியில் வெளிநாட்டில் உழைத்து பணியகத்தில் வீடுக்கடன் பெற எதிர்பார்த்திருப்போர் பிரிடோ நிறு;வனத்தின் 0772277425 அல்லது 0772277441 இலக்கத்தோடு தொடர்பு கொண்டால் அவர்களை அமைச்சோடு தொடர்பு படுத்தி கடிதங்களை பெற்றுத் தர பிரிடோ நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். என நிறுவனத்தின் வெளிகள இணைப்பாளர் எஸ் கே.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை கு. புஸ்பராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here