வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற குடும்ப அங்கத்தவா்களும்- திரும்பி வந்தோரும் தங்கள் எதிர்கால திட்டங்களை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் புதிய சேவையை பிரிடோ ஆரம்பிக்கிறது.
வீட்டு பணிப்பெண்கள் கட்டிட நிர்மாணத்துறை தொழிலாளர்கள் சாதாரண மற்றும் பார ஊர்தி சாரதிகள் மின்சாரத் துறை தொழிலாளர்கள் ஒட்டுனர்கள் நீர் விநியோகத்துறை தொழிலாளர்கள் என பல்வேறு துறையான வேலைகளுக்கு சென்று நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செய்யும் புலம் பெயர் அபிவிருத்தி பங்காளர்களில் அனேகமானோர் தாங்கள் சொந்த வாழ்வில் பெரிதான அபிவிருத்தியை அடையவில்லை.
வெளிநாட்டில் வேலை செய்து திரும்பி வருவோர் தமது வாழ்க்கை தரத்தை உயர்த்த தாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் சிறப்பாக பயன்படுத்தும் விடயத்தில் தௌிவின்மை காரணமாக அவர்களால் தங்கள் வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்த முடியாமல் உள்ளது என்பதை பிரிடோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
வெளிநாட்டில் பணி செய்து திரும்பி வரும் வீட்டு பணிப்பெண்கள் உட்பட கட்டிட நிர்மானத்துறை உட்பட பல துறைகளில் வேலைசெய்வோர் எத்தனையோ அனுபவத்துடனும் அறிவூடனும் திரும்பி வந்தாலும் அவா்களிடம் அதனை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களோ சான்றிதழ்களோ கிடையாது.
அவர்கள் திரும்பி வந்த பின்னர் மீண்டும் செல்லும் போது தாங்கள் ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தங்களுக்கு மேலதிக திறமைகள் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றால் அவர்கள் மீண்டும் செல்லும் போது அவர்களுக்கு அதிகரித்த சம்பளத்துடன் தொழில்களை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
அவ்வாறு அவர்கள் மீண்டும் வெளிநாடு செல்லாது உள்ளூரில் தொழில் செய்ய விரும்பினால் கூட உள்நாட்டில் அதிகரித்த சம்பளத்துடன் தொழில் பெறும் வாய்ப்புள்ளது.இது தெடர்பாக இவர்களுக்கு தௌிவான விளக்கமளிக்கும் நோக்குடன் அவர்களுக்கு வழிகாட்டும் திட்டமொன்றினை பிரிடோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ அதிக அங்கீகாரமும் வருமானமும் கிடைக்கக்கூடியதான தொழில் பெறும் வாய்ப்பு உள்ளது..
இந்த வழிகாட்டல் சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புவோர் 077 2277425, 077 2277441 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம். பெருந்தோட்டங்களிலுள்ள நமது இளைஞர்களும் மக்களும் வெறுமனே தமது பொருளாதார மேம்பாட்டுக்காக ஒரே விதமான விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் தொழில் திறமையை மேம்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரித்து வாழ்க்கைத் தரத்துடனான வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே பிரிடோ நிறுவனம் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அனைவரும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல்ஜோக்கிம் கோரியூள்ளார்
.
அக்கரப்பத்தனை நிருபர்