வேன் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து இரு பாடசாலை மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!!

0
265

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் 24.07.2018 அன்று மாலை 3.00 மணியளவில நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணஞ் செய்த இரண்டு மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கினிகத்தேனை சிங்கள மத்திய கல்லூரியிலிருந்து இருமாணவர்களையும், ஆசிரியையும் ஏற்றிக் கொண்டு அம்பகமுவ பகுதிக்கு சென்ற வேனும் நாவலபிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி வருகை தந்த பயணிகள் தனியார் பஸ்ஸூமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மாணவர்கள் மாத்திரம் காயமடைந்துள்ளதுடன் ஆசிரியைக்கோ, சாரதிக்கோ பாரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

vlcsnap-2018-07-24-18h53m33s913

இந்த விபத்து காரணமாக சில மணித்தியாலங்கள் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வாகன நெரிசலும் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து வேனையும், பஸ்ஸினையும் பொலிஸாரால் அகற்றியதன் பின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பின.

வேனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ் விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற் கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here