காலி கராபிட்டிய பொது வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ஒன்றை அபகரித்து சென்ற சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (17) பதிவாகியுள்ளது.
திருடப்பட்ட நகையின் பெறுமதி 140,000 ரூபாய் என குறிப்பிட்ட வைத்தியர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்க நகையை அபகரித்து சென்ற நபர் தொடர்பில் தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.