ஷனாயா கபூரின் புதிய படம்…கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

0
46

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘து யா மெயின்’. ‘எ கலர் யெல்லோ புரொடக்‌சன்ஸ்’ நிறுவனத்தின் கீழ் ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு சர்மா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

சஞ்சய் கபூர் மற்றும் மஹீப் கபூரின் மகள் ஷனாயா கபூர். இவர் முன்னதாக ”பேதடக்” படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்தார், ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ”ஆன்கோன் கி குஸ்டாக்கியான்” மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. தற்போது ‘து யா மெயின்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here