ஹட்டன் பகுதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கிலும் பொது மக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் ஹட்டன் பகுதியில் போக்வரத்தில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மற்றும் நுவரெலியா மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் இணைந்து இன்று (02) ம் திகதி தீடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதன் போது ஹட்டன் எபோஸ்லி பிரதான வீதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்று போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டது.
இன்னும் சில வாகனங்கள் திருத்தியமைக்குமாறும் அவர்களுக்கு தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் திருத்தி அமைத்து மீண்டும் கொண்டு வந்து காட்டுமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டன.
குறித்த பரிசோதனை ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்கு பொறுப்பான அத்தியட்சகர் திலின தெஹிகம அவர்களின் வழிகாட்டலில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பரிசோதகர் டி,கே.ஏ.சி.சி.குலசூரிய அவர்களின் ஏற்பாட்டில் நுவரெலியா மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் டி.எம்.ரி,கே.திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
மலைவாஞ்ஞன்