ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் கஸ்ட்ட பிரதேசங்களில் இணைய வழிகல்வியினை பெற முடியாத மாணவர்களுக்கு 18 இணைய வழி கல்வி நிலையங்கள் இன்று (05) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இணைய வழியினூடாக கல்வியினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமைய இணைய தொடர்பு இல்லாத பிரதேசங்களில் இணைய கல்வி நிலையங்கள் நாடளவிய ரீதியில் இணைய வழி கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுவருகின்றன.
சுகாதார வழிகாட்டல்களுகமைய இந்த நடவடிக்கைகாக ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் இதனை முன்னெடுப்பதற்காக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர் கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கடந்த சனிக்கழமை இதற்கான கலந்துரையாடல் ஹட்டன் சீடா வளய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதனை நேற்று பரீட்சார்த்த கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கல்வி நிலையங்களில் இணைய வசதிகள் பெற முடியாத மாணவர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 தொடக்கம் 15 மாணவர்கள் கல்வி வசதிகள் பெறக்கூடிய வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இந்த நிலையங்களில் அப்பாடசாலையின் அதிபர் மற்றும் இரண்டு ஆண், மற்றும் பெண் ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த கல்வி நடவடிக்கைகள் காலை 7 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை நடைபெறும் எனவும் ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதற்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் ஒன்றில் 06 நிலையங்களும் கோட்டம் இரண்டில் 03 நிலையங்களும் கோட்டம் மூன்றில் 05 நிலையங்களும் கோட்டம் நாலில் 04 நிலையங்களுமாக 18 நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையங்களுக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய வருகை தர வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்த கல்வி நடவடிக்கையினை ஹட்டன் கல்வி வலயம் மேற்பார்வை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்