மடக்கி பிடிக்கபட்ட திருடன் ஹட்டன் குடாஒயாவில் சம்பவம்
ஹட்டன் குடாஒயா விநாயகர் புறம் பகுதியில் உள்ள இந்துமத ஆலய குருக்களின் வீட்டினுல் 06.02.2018.செவ்வாய் கிழமை இரவு உட்புகுந்த திருடனை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 06.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது குறித்த குருக்கள் வீட்டில் கூரை பகுதியை கழற்றி கொண்டு உட்புகுந்த வேலை சிறியகுழந்தையின் அலரல் சத்தத்தை கேட்ட வீட்டாரும் அயலவர்களும் குறித்த சந்தேக நபரை மடக்கி பிடித்து மரம் ஒன்றில் கையிற்றினால் கட்டவைத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இது தொடர்பாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு கைது செய்யபட்ட சந்தேகநபர் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் . எஸ்.சதீஸ்