நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்வரிவு ஏற்பட்டுள்ளது. இதன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி ஊடாக பொது போக்குவரத்து தியகல பகுதியிலும். கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் மீப்பிட்டிய பகுதியிலும் பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.
ஹட்டன் கினிகத்தேனை பிரதான வீதியில் தியகல சோதனை சாவடிக்கு சுமார் கீழ் பகுதியிலும் சோதனை சாவடிக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டுள்ளன.
பாரிய கற்களுடன் மண் மற்று பாரிய கற்கள் சரிந்து வீதியில் வீழந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளன.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளன போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
வீதியில் கொட்டி கிடக்கும் பாரிய கற்கள் மரங்கள்,மற்றும் மண் ஆகியவற்றை அகற்றும் பணிகளை வீதி போக்குவரத்து அதிகாரசைப ஊழியர்களினால் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியினை வழமைக்கு கொண்டு வரும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே நேரம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் குறித்த வீதிகளில் மேலும் சில இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த வீதிகளை பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்