எட்டியாந்தோட்டை கபுலுமுல்லை பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹராவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை இரவு ஹட்டன் -கொழும்பு வீதியில் அந்த பகுதியூடான வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி இன்று இரவு 8.40 மணி முதல் பெரஹரா மீண்டும் தேவாலாயத்தை வந்தடையும் வரை அந்த வீதியூடான வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதனால் அவிசாவளை பக்கமிருந்து ஹட்டம் பக்கம் செல்லும் வாகனங்கள் கரவனெல்லை ஊடாக அங்குருவெல்ல நகருக்கு சென்று அங்கிருந்து கல்பாத வீதியூடாக கொமாடுவ ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிக்கு வர முடியும்.
அத்துடன் எட்டியாந்தோட்டை பக்கமிருந்து அவிசாவளை பக்கம் செல்லும் வாகனங்கள் கராகொடை வீதியூடாக கரவெனெல்லைக்கு சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.