ஹட்டன், சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் மோதியதில் நபரொருவர் பலியாகியுள்ளார். இன்று மதியம் 1.45 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சிங்கமலை சுரங்க பாதையில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரே, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இவ்வாறு பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவர் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவரிடம் எந்தவொரு ஆவணமும் இருந்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.