ஹட்டன் பேக்கரியில் பெற்ற உணவில் மனித விரல் துண்டு

0
78

ஹட்டனில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.

உள்ளூர் பேக்கரியில் இருந்து வாங்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட பாண் துண்டுக்குள் மனித விரலில் இருந்த தோலின் ஒரு பகுதியைக் வாடிக்கையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

வியாழக்கிழமை (25) இரவு வாடிக்கையாளர் ரூ. 180 க்கு பாண் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை உட்கொள்ளும் போது, ​​அந்த நபர் தோல் துண்டைக் கவனித்து உடனடியாக மேலும் சாப்பிடுவதைத் தவிர்த்ததோடு தோல் துண்டுடன் உணவு பொருளையும் அட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார ஆய்வாளர்களிடம் (PHI) ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து ஆராய்ந்த பின்னர், பேக்கரி உரிமையாளருக்கு ஏற்கனவே அட்டன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பல முறை அபராதம் விதிக்கப்பட்டு, வளாகத்தை சுகாதாரமற்ற நிலையில் பராமரித்ததற்காக வழக்குத் தொடரப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சமீபத்திய சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக பல புதிய வழக்குகளைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here