ஹமாஸை ஒழிப்போம் – இஸ்ரேல் பிரதமர் சபதம்!

0
9

இஸ்ரேலால் முன்வைக்கப்பட்ட 60 நாட்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல் காஸா மீது போர் நடவடிக்கைகளை தொடங்கக் கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட 60 நாட்கள் போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காஸாவில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறுகையில் : ஈரானுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வருகை. மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்டெடுக்கவும், ஹமாஸின் இராணுவ கட்டமைப்பை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது 60 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக, உயிருடன் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்கவும், இறந்த பணயக்கைதிகளின் உடலை ஒப்படைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.

இந்த போர் நிறுத்தத்தின் தொடக்கத்தில், போருக்கு நிரந்தர முடிவு கட்டுவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம். ஆனால் ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு முழுமையாக இராணுவமயமாக்கல் உட்பட, இஸ்ரேலின் குறைந்தபட்ச நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காஸாவில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறோம். இராணுவத்தின் முழு பலத்தை காட்டுவோம்.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகப் பெரிய சாதனைகளைப் பெற்றுள்ளோம். இராஜதந்திரம் வேலை செய்யவில்லை என்றால் இராணுவ பலத்தின் மூலம் செயல்பட விரும்புகிறோம்.

போராளிகளின் துணிச்சலுக்கு நன்றி. ஹமாஸின் பெரும்பாலான இராணுவ திறன்களை நாங்கள் தகர்த்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here