ஹலிஎல அம்பஉக பகுதியில் 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்- மூவர் படுகாயம்!!

0
145

பதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை – பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பஉக பகுதியில் 19.05.2018 அன்று அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Van (3)

 

Van (1)

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here