முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூரதீன் அவர்களின் வீட்டில் வேலைக்கு சென்று உயிரிழந்த ஜூட்குமார் ஹிசாலினி என்ற சிறுமிக்கு ஆத்ம சாந்தி வேண்டி இன்று (28) திகதி மட்டுகலை சனசமூக மண்டபத்தில் ஆத்ம சாந்தி பிராரத்னை ஒன்று மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் வேலு சுரேஸ்வர சர்மா தலைமையில் இடம்பெற்றது.
இதில் மலையகத்திலிருந்து தனவந்தர்களின் வீடுகளி;ல் வறுமை காரணமாக வீட்டு வேலைக்கு சென்று சிறுவர்கள் உயிரிழப்பது மிகவும் வேதனைக்குரியதும் கண்டனத்திற்குரியதும் ஆகும்.
தங்ககளுடைய வீடுகளில் வேலை செய்பவர்கள் மிகவும் கன்னியமாக நடத்தப்பட வேண்டும் அவ்வாறாது இல்லாது கடந்த 15 திகதி ஹிசாலினி எனும் சிறுமி மிகவும் கொடுரமான முறையில் பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது எவராக இருந்தாலும் சரி உரிய குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் இதனை நாட்டின் தலைவர் ஜனாதிபதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் எமது நாட்டில் இடம்பெறாது தடுக்க வேண்டும் எனவும் இவர்கள் இதன் போது கேட்டுக்கொண்டனர்.
டயகம பகுதியைச் சேர்ந்த ஹிசாலினி 16 வயதுடைய சிறிமி கடந்த வருடம் கொழும்பிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூரதீன் அவர்களின் வீட்டு வேலைக்கு சென்று கடந்த 03 திகதி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் சிகச்சை பலனின்றி கடந்த 15 திகதி உயிரிழந்தார். குறித்த சிறுமி தீ வைத்துக்கொண்டாரா?அல்லது தீ வைத்து கொள்ளப்பட்டனரா? என்ற சந்தேகத்தின் பேரில் பல்வேறு கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மலையக பகுதிகளில் ஆர்பாட்டங்களும் கவனயீர்ப்பு போராட்டங்களும் ஆத்ம சாந்தி நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மலையகத்தின் பல பிரதேசங்களிலிருந்து இந்து குருமார் ஒன்றியத்தின் குருமார்கள் கலந்து கொண்டிருந்தன.
கே.சுந்தரலிங்கம்