ஹிஷாலினியின் மரணத்தினை அரசியலாக்காது அதனை பாடமாக எடுத்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

0
192

ஹிஷாலினியின் மரணத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் காரணமானவர்களை இனங்கண்டு அதற்கு தகுந்த தண்டனை வழங்கும் அதே நேரம் அதனை அரசியலாக்காது இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க இதனை பாடமான கொண்டு அரசியல் மற்றும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும் சமூக சேவையாளருமான எஸ்.கே.சந்திரசேகரன் தெரிவித்தார். இன்று (30) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்……

மலையகப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல இதற்கு முன்னும் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன ஆனால் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி விட்டு அதனை மறந்து விடுகிறார்கள் இந்நிலை மாற வேண்டும் மலையகத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பக்கூடாது என்று தோன்றும் அளவுக்கு அவர்களை விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தினை பொறுத்தவரையில் அரச சேவைகள் தோட்டப்பகுதிகளுக்கு செல்வது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன இதனால் தான் கடந்த காலங்களில் பிரதேச செயலகங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தன ஆனால் தற்போது அவை வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

அவை அதிகரிக்கப்பட்டிருந்தால் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சிறுவர் அபிவிருத்தி உத்யோகஸ்த்தர்கள் என பலர் அதிகரிக்கப்படுவார்கள் இப்போது தோட்டங்களில் இவர்கள் சேவையினை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும் அப்போது சிறுவர்களுக்கு பாதுகாப்பும் அவர்களுக்கு உரிமையை அனுபவிக்கின்ற சூழலும் ஏற்படும்.

இதனை தவிர கொழும்புக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ வேலைக்கு செல்லும் போது அவர்களை தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் அப்போது இவர்களுக்கும் வேலை வழங்குநருக்கும் பாதுகாப்பு ஏற்படுவதுடன் தொழில் அங்கிகாரமும் கிடைக்கும், இதனை தவிர அரசியல் அமைப்புக்கள் அல்லது ஏனைய அமைப்புக்கள் தங்களது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது இது ஒரு முக்கியமான விடயமான கருதி முதன்மைத்துவப்படுத்தி இதற்கு முக்கியத்துவமளித்து செயப்படுவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here