அக்கரப்பத்தனை டொரிங்டன் தொழிற்சாலைப்பிரிவில் டிரக்டர் குடைசாய்ந்ததினால் உயிரிழந்த தங்கையா என்பவருக்கு தகுந்த நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கடந்தவாரம் டிரக்டர் வண்டியில் உரம் ஏற்றி சென்றபோது டிரக்டர் வண்டி குடைசாந்ததில் தங்கையா என்பவர் பலத்த காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதை தோட்ட நிர்வாகம் மூடி மறைக்க நினைத்தாலும் அதனை நாங்கள் வெளிப்படுத்தினோம்.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நட்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கையை இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை ஸ்டெயார் டிவிசனில் இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையின் பயனாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாவும் குடியிருப்பதற்காக ஒரு வீடும் உயிரிழந்த தங்கையாவின் மனைவிக்கு ஒரு நிரந்தர தொழிலும் அவரது பிள்ளைகள் இருவருக்கு தலா 20 பேர்ச் நிலமும் பெற்றுக் கொடுப்பதாக தோட்டம் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு தொடர்ச்சியாக மலையகத்தில் தொழிலாளர்கள் உயிரழக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாது தோட்ட நிர்வாகவும்,கம்பனியும் தொழீலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு இ.தொ.கா உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்