அக்கரபத்தனையில் தோட்ட புற மக்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்க நடவடிக்கை.

0
137

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்புற பகுதிகளில் இலவச ஆயுர்வேத மருந்து பொருட்களை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அதற்கான கலந்துரையாடலொன்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் இராமன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

மெரெயா ஆயுர்வேத வைத்தியசாலையில் கடைமைபுரியும் வைத்திய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இவ்விடயம் முன்வைக்கப்பட்டது.இதன்போது அக்கரபத்தனை பிரதேச சபையை கொண்ட தோட்டப்பகுதிகளில் தொற்று நோய்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அதேநேரத்தில் நுளம்புகளினால் அதிக நோய்பரவல்கள் ஏற்படுவதாகவும் அவ்வாறான பகுதிகளை இனங்கண்டு அவர்களுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்களை விநியோகத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபத்தலைவர் சச்சுதானந்தன் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here