அக்கரபத்தனை பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெறுவதில் மக்கள் பெரும் அவதி

0
136

அக்கரப்பத்தனை பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெரும் போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக இந்த கொடுப்பனவை பெற வரும் முதியவர்கள் இன்று (27.12.2021) தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 400 க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அக்கபரபத்தனை தபாலகலகத்திற்கு வருகை தருகின்றனர். எனினும் குறித்த கொடுப்பனவை உரிய நேரத்தில் பெற முடியாமல் பலமணிநேரம் வீதியில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலைகள் வானளவு உயர்ந்துள்ள நிலையில் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு அதிலும் பாதிக் காசினை முச்சகரவண்டிகளுக்கு செலவிடவேண்டியுள்ளதாகவும் அவ்வாறு பலர் சிரமங்கள் மத்தியில் வருகை தந்தாலும் பல மணிநேரங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் ஒரு சிலர் தெரிவித்தனர்.

இது குறித்து தபாலக ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் குறித்த கொடுப்பனவு அரசாங்கத்தில் போடும் போதே அவ்வப்போது வழங்கப்படுவதாகவும் ஒரு நாளில் பலரும் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வருவதனால் இவ்வாறு காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் ஊழியர்கள் குறைவாக உள்ளதனால் குறித்த கொடுப்பனவு வழங்க தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

எது எவ்வாறான போதிலும் வயோதிப காலத்தில் கொடுக்கின்ற கொடுப்பனவை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை உரிய பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here