அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.

0
174

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்சசெல்வன் தான் வகித்து வந்த பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதுடன் தனது இராஜினாமா கடிதத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்செல்வன் இன்றைய தினம் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பான பதவி விலகள் கடிதத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களிடம் கையளித்துள்ளார்.

மேலும் தான் பதவி விலகியமையானது தனது தனிப்பட்ட தீர்மானமே என்றும் தனது பதவி விலகலுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் எவ்விதமான முரண்பாடும் இல்லை என்று அவர் கடிதமூலம் தெரிவித்துள்ளார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here