அக்கரப்பத்தனை பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இம்மாதம் 26ம் திகதி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் தமக்கு சேவையாற்றக்கூடிய ஆளுமை மிக்க தலைவரையே தெரிவு செய்ய வேண்டுமென அக்கரப்பத்தனை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பிரதேச சபை தேர்தலின் பின்னர் இதுவரை காலமும் எவ்விதமான முன்னேற்றரகமான சேவைகளும் இடம்பெற வில்லை .அதோடு தலைவராக தெரிவு செய்யப்பட்ட கதிர்ச்செல்வனும் மூன்று முறை பதவியை இராஜினாமா செய்யப்போவதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
எனவே இம்முறை தெரிவு செய்யப்படும் தலைவர் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தலைவராக இருக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.