அக்கரபத்தனை கிரன்லி கீழ்ப்பிரிவு ரோபோ கப் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப் போட்டி தீபாவளி பெருநாளையொட்டி இடம்பெற்றது.போட்டி ஏற்பாட்டாளர்களான கேதீஸ்வரன்,சிவக்குமார் மற்றும் தியாகு ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் சச்சிதானந்தன் கலந்து கொண்டதோடு வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்கள் பண பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.