அக்கரப்பத்தனையில் வீடு கையளிப்பு.

0
143

மலையகத்தில் பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் மலையகம் எமது தாயகம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் பல வருட காலமாக வசிப்பதற்கு வீடு இன்றி சிரமத்தை எதிர்கொண்ட குடும்பம் ஒன்றிற்கான புதிய வீடொன்று கட்டப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் 100பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வாழும் தோட்ட பொதுமக்கள் மற்றும் மலையகம் எமது தாயகம் சமூக அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here