அக்கரப்பத்தனை பகுதியில் சிரமதான பணி முன்னெடுப்பு.

0
230

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை பாடசாலைகளுக்கு செல்லும் வீதி முழுவதும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது அக்கரப்பத்தனை பகுதியில் காணப்படும் தமிழ்,சிங்கள பாடசாலைகளுக்கு செல்லும் வீதியில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இ.தொ.கா உபதலைவர் சச்சுதானந்தன், அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள்,அக்கரப்பத்தனை சுகாதார பரிசோதகர்கள்,பாடசாலைகளின் ஆசிரியர்கள்,அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊழியர்கள்,நகர வர்த்தகர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here