அக்கரப்பத்தனை பகுதியில் சிவில் ஆவணங்கள் பெற்றுக்கொடுக்க நடமாடும் சேவை.

0
237

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேசத்தில் பெருந்தோட்டப்பகுதியில் வாழும் மக்களின் நன்மை கருதி அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள 11 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மக்களுக்கு ஆவணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவை இன்று (22) திகதி அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற குறித்த நடமாடும் சேவையில் பிறப்புச்சான்றிதழ்,திருமண சான்றிதழ் மரணச்சான்றிதழ்,தேசிய அடையாள முதியோர் அடையாள அட்டை ,காணி பிரச்சினை,அஸ்வெசு கொடுப்பனவு தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் சிலருக்கு அத்தியாவசிய ஆவணங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவைக்கு டயகம,ஆக்ரா,அக்கரபத்தனை உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1500 அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எஸ் பிரேமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் கே.கே.பி..ரத்நாயக்க, நிர்வாக உத்தியோகத்தர் எஸ் விமலதர்ஷனி கிராம அலுவலர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் பிரேமசந்திர மற்றும் கண்டி பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரிகள்,மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள்,சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், காரியாலய அதிகாரிகள் கிராம சேவகர்கள், ஆயர்வேத வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சேவைகளை பெற்றுக்கொடுத்தனர்.. அதேவேளை பிரதேச நலன் விரும்பிகளின் உதவியுடன் சிறப்பாக இடம்பெற்றது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here