அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து அட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

0
239

அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தோட்ட முகாமையாளர் உடனான பேச்சுவார்த்தை ஒன்று அட்டன் உதவி தொழில் ஆணையாளர்
அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன்,
தொழிற்சங்க முக்கியஸ்தர் டாக்டர். அ.நந்தகுமார், தொழில் உறவு அதிகாரி சிங்கராயர்,டயகம பணிமனை உத்தியோகத்தர் திருமதி ராஜேஸ்வரி,வெவர்லி தோட்ட முகாமையாளர் அத்தநாயக்க,உதவி தொழில் ஆணையாளர் அமரதிலக்க மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெவர்லி தோட்டப் பிரிவுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்ற வெவர்லி தோட்டத் தேயிலை தொழிற்சாலையை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை குறித்து அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வது.

தேயிலைத் தொழிற்சாலையில் இதுவரை வேலை செய்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல்.

ஏனைய பிரச்சினைகள் குறித்து தோட்டத் தலைவர்கள் தோட்ட முகாமையாளருக்கும் இடையில் தோட்டக் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி அதன் ஊடாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.

இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க விட்டால் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை அட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here