அச்சம் பயமின்றி தடுப்பூசிகளை பெற்று கொhள்ளுமாறு மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
தோட்ட மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக அரசாங்கம் சுமார் 39 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கிவுள்ளது. இதற்கு பிரதான காரணம் நுவரெலியா மாட்டத்தில் மிக அண்மைக்காலமாக கொவிட் 19 தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 60 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தோட்ட பகுதியில் உள்ள பெரும் எண்ணிக்கையானோர் இந்த தடுப்பூசியினை போடுவதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் கடந்த காலங்களில் நூற்றுக்கு சுமார் 50 தொடக்கம் 60 சதவீதமானவர்களே தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவில்லை. ஆகவே இந்த தடுப்பூசி போடுவதற்கு பயப்பட தேவையில்லை. அச்சமடைய தேவையில்லை இதில் இது வரை எந்த வித பாதிப்பும் கிடையாது ஏனைய பிரதேசங்களை எடுத்துக்கொண்டால் பெரும் எண்ணிக்கையிலானோர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதற்காக வருகை தருகின்றனர் பெரும்பாலானவர்கள் போட்டுக்கொள்ள முடியாமல் திரும்ப திரும்ப வர வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஆகவே எமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை நாம் முறையாக பயன்படுத்தி தடுபபூசிகளை ஏற்றிக்கொள்வதன் மூலம் நாம் இந்த நோய் தொற்றில் ஏற்படும் உயிராப்த்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம். நோய் தொற்றாமலும் எம்மை பாதுகாத்து கொள்ளலாம் தடுப்பூசி போடப்பட்டடிருந்தால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட பெரும் பாதிப்பு இருக்காது.என அவர் மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா 320 கிராம சேவகர் பிரிவில் உள்ள 736 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு இன்று (14) மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையத்தில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலா முதியவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இத்தடுப்பூசி வழங்கும் நிகழ்வுக்கு இரானுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
கே.சுந்தரலிங்கம்