கொஹுவலை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட களுபோவில விகாரை பாதையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (15) காலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வீட்டின் வாயிலிலும் வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை என்றும் பணத் தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




