அஜித் நிவாட் கப்ராலுக்கு பதிலாக யோஷித்த ராஜபக்ஸ?

0
164

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பிரதமர் அலுவலக பிரதானி யோஷித்த ராஜபக்ஸவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட கோரிக்கைக்கு அமைய, அஜித் நிவாட் கப்ரால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதேவேளை, பஷில் ராஜபக்ஸவின் வருகைக்காக, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த, ஜயந்த கெட்டகொடவிற்கு, வெற்றிடமாகும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஒரு சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here