அடிக்கடி காஃபி குடிப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! அதுக்காக அதிகமாக குடிக்க வேண்டாம்..

0
167

Health Benefits Of Drinking Coffee : ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காஃபி குடிப்பது இதயத்திற்கு நல்லது என்பது கண்டறியப்பட்டுள்ளது.நீங்கள் ஒரு காஃபி லவ்வரா? அல்லது சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா? ஆம் என்றால் உங்களுக்கு ஒரு குட் நியூஸ். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காஃபி குடிப்பது இதயத்திற்கு நல்லது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் 71 வது வருடாந்திர அறிவியல் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆராய்ச்சியின் முடிவானது “இது” இருதய நோய் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பொருந்தும் என்று கூறுகிறது.

“காஃபி இதயத் துடிப்பை விரைவுபடுத்தும் என்பதால், அதை குடிப்பது சில இதயம் சார்ந்த பிரச்சினைகளைத் தூண்டும் அல்லது மோசமாக்கும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் காஃபி குடிப்பதை நிறுத்துவதற்கான மருத்துவ ஆலோசனைகளுக்கும் அவர்கள் இறங்குகிறார்கள். ஆனால், உண்மையில் காஃபி, இதய நோய் உள்ளவர்கள் மற்றும் இதய நோய் இல்லாதவர்களின் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட வேண்டும் என்று எங்கள் தரவு தெரிவிக்கிறது,” என்று ஆல்ஃபிரட்டின் அரித்மியா ஆராய்ச்சியின் எம்.டி., பேராசிர் மற்றும் தலைவருமான பீட்டர் எம். கிஸ்ட்லர் கூறி உள்ளார்.

மேலும் பீட்டர் எம். கிஸ்ட்லர், “காஃபி குடிப்பது ஒரு நடுநிலை விளைவை கொண்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதாவது அது எந்தத் தீங்கும் செய்யவில்லை, அதேசமயம் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளுடன் தொடர்பும் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகப் பின்தொடரப்பட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுகாதாரத் தகவல்களே இந்த ஆய்வின் முடிவு” என்று கூறி உள்ளார்.

முதல் கட்டமாக, இதய நோய் இல்லாத 382,535 நபர்களிடம் இருந்து 10 ஆண்டுகள் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து, காஃபி குடிப்பதற்கும் இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கு கொண்டவர்களின் சராசரி வயது 57 மற்றும் பாதி பேர் பெண்கள் ஆவர்.

பொதுவாக, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காஃபி குடிப்பது மிகப்பெரிய நன்மையுடன் தொடர்புடையது, இது கரோனரி ஹார்ட் டிசீஸ், ஹார்ட் ஃபெயிலியர், ஹார்ட் ரிதம் ப்ராப்ளம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக ஒருவர் இறக்கும் அபாயத்தை 10 -15 சதவீதம் வரை குறைக்கிறது. அதேபோல, ஒரு நாளைக்கு ஒரு கப் காஃபி குடிப்பவர்களிடையே பக்கவாதம் அல்லது இதயம் தொடர்பான பாதிப்பால் இறக்கும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது.

இரண்டாம் கட்ட ஆய்வில், சில வகையான இருதய நோய்களைக் கொண்ட 34,279 நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் கீழ், காஃபி குடிக்காதவர்களை விட, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் வரை காஃபி குடிப்பவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காஃபி குடிப்பதென்பது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியத்திற்கு சாதகமானதாகத் தோன்றினாலும் கூட, மக்கள் தங்களின் காஃபி உட்கொள்ளலை அதிகரிக்கக் கூடாது என்றும் கிஸ்ட்லர் எச்சரிக்கை விடுகிறார்.

மூன்றாவது ஆய்வில், காபி மற்றும் இதய நோய்க்கு இடையே உள்ள உறவில் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் பார்த்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here