அடுத்த ஆட்சி மொட்டுக் கட்சியுடையது!

0
6

அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது மஹிந்தவின் குடும்பம் தான். அதனாலேயே இந்த அரசு மஹிந்தவின் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தலில் 2.5 வீதமாக இருந்த எமது வாக்குவங்கியை 10 வீதமாக உயர்த்தியுள்ளோம்.மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சியாக நாமே உள்ளோம். மஹிந்தவின் குடும்பம் இப்போது மக்களின் நம்பிக்கையை வென்று வருகிறது. நாங்கள் குற்றச்சாட்டுகளைக் கண்டு அஞ்சவில்லை. எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாம் தயார்.

எல்லாமே உருப்படியற்ற குற்றச்சாட்டுகள். கடந்த காலங்களில் சாட்சிகள் இல்லாமல் ஒதுக்கப்பட்ட மஹிந்த குடும்பத்துக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார்கள். நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்து எம்மை சிறையில் தள்ள வேண்டாம். நாம் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம் கடந்த காலங்களில் எங்களது ஆட்சியில் நாங்கள் செய்த பிழையை இனி செய்யமாட்டோம்- என்றார்​ை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here