அடுத்த உலக கிண்ணத்தை இலங்கை அணி வெல்லுமாம்

0
206

எதிர்வரும் உலகக் கிண்ணத்தை தற்போதைய இலங்கை கிரிக்கெட் இளையோர் அணி நிச்சயமாக வெல்லும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுத் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் இவ்வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 12ஆவது இடத்தில் இலங்கை அணி இருந்ததாகவும், ஆனால் அந்தப் போட்டியின் பின்னர் அது 09ஆவது இடத்திற்கு முன்னேறியதாகவும், அந்த வெற்றி மனப்பான்மையுடன் இலங்கை அணி உலகக் கிண்ண போட்டியில் நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் தான் கட்டமைத்த இளைஞர் அணியின் நிலையைப் பாருங்கள் என்று கூறிய அவர், தேர்வுக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், தன்னை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கலாம் என்றும் கூறினார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here