”அடுத்த சிம்​பொனியை எழுத இருக்கிறேன்” – இளையராஜா அறிவிப்பு!

0
5

புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை அங்குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் அரங்​கேற்​றம் செய்​தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார்.

அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில் ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்​வை​யாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழுதி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை இளை​ய​ராஜா படைத்​தார். இசை ஜாம்​ப​வான்​கள் மொஸார்ட், பீத்​தோவன், சாய்​கோவ்​ஸ்கி ஆகிய சிம்​பொனி இசைக் கலைஞர்​கள் வரிசை​யில் இளை​ய​ராஜா​வும் இணைந்​தார்.

இந்த நிலையில் தனது புதிய சிம்பொனி இசை குறித்த அறிவிப்பை இளை​ய​ராஜா​ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளி நாளில் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன். அத்துடன் புதிய படைப்பாக சிம்பொனி டான்சர்ஸ் என்ற புதிய இசைக் கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

HinduTmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here