அட்டனில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பெரியளவு எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.

0
157

அட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பெரியளவு எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை ஏற்பட்டது.

அத்தியவசிய சேவைக்காக சுகாதாரதுறையினருக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.

எனினும், சிலர் நேற்று (01) முதல் வரிசையில் காத்திருந்து இன்று காலை எரிபொருளை பெற்றுக் கொள்ள சென்ற வேளையில் எரிபொருள் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எதிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கினிகத்தேன, நாவலப்பிட்டி, தலவாக்கலை, கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் பணியாற்றும் வைத்தியசாலை ஊழியர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

6,600 லீட்டர் பெற்றோல் தொகையே இவ்வாறு கொண்டு வந்ததாகவும், அவை தீர்ந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டமையினால் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here